இன்றைய திகதியில் 50 வயதைக் கடந்தவர்களில் 15 சதவீதமும், 60 வயதைக் கடந்தவர்களில் 20 சதவீதமானவர்களும் அல்சைமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. 

இந்நிலையில் இந்த அல்சைமர் நோயால் அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் 2050 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரியப்படுத்துகிறது. அதனால் விஞ்ஞானிகள் தற்போதே இதற்கான மருத்துவத்தை தேடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு மரிஜுவானா என்ற இலையின் மகத்துவம் தெரியத் தொடங்கியுள்ளது. இந்த மரிஜுவானா, அல்சைமர் நோயை உருவாக்கும் பீட்டா அமிலாய்ட் புரதத்தை நரம்பு செல்களிலிருந்து முழுமையாக அகற்றுகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் மூளைக்கு தகவல் அளிக்கும் நரம்புகளிள் செயல்பாட்டையும் இந்த மரிஜுவானா வலுப்படுத்துகிறது. இதனால் நினைவுத்திறன் மேம்படவும் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூளையிலுள்ள நரம்பு செல்கள் இறப்பிற்கும் செயல்படாத நிலைக்கு செல்வதற்கும் அங்கு அதிகரிக்கும் பீட்டா அமிலாய்ட் புரதம் தான் காரணம் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக அண்மையில் அமெரிக்காவிலுள்ள பில்கேட்ஸ் மரிஜுவானா பயிரிட சட்டப்படி அனுமதி கோருவது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். அவரின் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டால் மரிஜுவானாவின் பயன்பாடு அதிகரித்து, அல்சைமர் எனப்படும் மறதி நோயிலிருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்கலாம். இத்திட்டம் விரைவில் தெற்காசியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்