மீண்டும் 'முருங்கைக்காய்'

25 Jul, 2020 | 04:36 PM
image

'பவர் ஸ்டார்' சீனிவாசன் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'முருங்கைக்காய்' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான 'ஐ 'படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகர் 'பவர்ஸ்டார்' சீனிவாசன். 

பல படங்களில் சந்தானத்துடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் தயாராகவிருக்கும் 'முருங்கைக்காய்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகை தமிழ்ச்செல்வி நடிக்க, குணச்சித்திர நடிகர் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எஸ்.எல்.எஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.ரம்யா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'தொரட்டி'  படப்புகழ் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்குமார் சிவபெருமான் என்பவர் இசையமைக்கிறார்.

'முருங்கைக்காய்' பட ஃபர்ஸ்ட் லுக்கில், 'நேச்சுரல் வயாகரா டொட் கொம்' என்ற டேக் லைனும், அதன் பின்னணியில் ட்ரிபிள் எக்ஸ் என்ற லோகோவும் இடம்பெற்றிருப்பதால், இந்தப் படம் அடல்ட் காமெடி என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுகிற்கு இளைய தலைமுறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் சாந்தனு பாக்கியராஜ் அதுல்யா ரவி நடிப்பில் தயாராகும் திரைப்படத்திற்கு 'முருங்கைக்காய் சிப்ஸ்' என பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35