யாழ். நல்லூர் கந்தனின் பெருந்திருவிழா இன்று ஆரம்பம் - நேரலை

25 Jul, 2020 | 01:14 PM
image

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று காலை மு.ப. 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பெருந்திருவிழாவில், 10 ஆம் நாளான ஆகஸ்ட் 03 ஆம்திகதி மஞ்சத் திருவிழாவும், ஆகஸ்ட் 12 ஆம் திகதி சூர்யோற்சவமும் அன்று மாலை கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளன.

13 ஆம் திகதி வியாழக்கிழமை கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சப்பைரதத் திருவிழாவும் அடுத்த நாள்  17 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்த் திருவிழாவும், 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி  இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் கடந்த 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடாத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர்,

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில்,  யாழ் மாவட்டம் கொரோனா  கட்டுப்பாடு  பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது

இந்த சூழ்நிலையிலே யாழ் குடாநாட்டில் நிறைய ஆலயங்களில் திருவிழாக்கள் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது அதேபோலத்தான் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் ஏனைய திணைக்களங்கள் பொலிஸ் இராணுவத்துடன் இணைந்து நாங்கள்  மேற்கொண்டுள்ளோம்.

அவை அனைத்தும் தற்போது பூரண படுத்தப்பட்டுள்ளது எனினும் தற்போது பக்தர்களுடைய வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வழமையாக நல்லூர் ஆலய உற்சவத்திற்கு இலங்கையிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவது வழமை அதாவது லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு திருவிழாவாக நல்லூர் ஆலய திருவிழா காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் இந்த நல்லூர் ஆலய உற்சவத்தினை நடாத்துவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

வழமைபோன்று இன்று தொடக்கம் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதேபோல கடைகள் வியாபார நிலையங்களிற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அன்னதானம் காவடி மற்றும்  பக்தர்களின் வழிபாட்டு முறைகள் சிலவற்றிற்கும்  இம்முறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நல்லூர் ஆலய உற்சவத்தினை சிறப்பாக மேற்கொள்வதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு உள்ளும் வெளியிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அதேபோல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களின் வருகையினை  எதிர்பார்க்கின்றோம்.

எனவே வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கபடுவார்கள் அதேபோல் இந்த ஆலய திருவிழாவின் போது பெரும் திரளாக மக்கள் கூடி  சமூகத்தொற்று ஏற்படா வண்ணம் ஆலய உற்சவத்தில் மக்கள் கலந்து கொள்வதன் மூலமாகவே நல்லூர் ஆலய உற்சவத்தினை  தொடர்ச்சியாக 25 நாட்களும் எந்தவித தடையுமின்றி நடாத்த முடியும் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை கட்டாயம் வழங்க வேண்டும் ஏனென்றால் அவர்களால் சில பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதனையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் ஆலய உற்சவத்தினை தொலைக்காட்சி வழியாக வீடுகளிலிருந்து நேரடியாகவும் அதனைப் பார்க்க முடியும் அதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண  நகரம்  சனநெரிசல் கூடியஒரு  பிரதேசம் அதே நேரத்தில்  கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ள  பிரதேசம்  இந்த ஆலய உற்சவத்தில் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமலும் அதனைப் பாதுகாத்து கொள்ள வேண்டிய பொறுப்பு எம் அனைவரையும் சார்ந்ததே எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47