இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கையுடன் பரிமாற்றம்

Published By: Jayanthy

25 Jul, 2020 | 08:13 AM
image

2022 ஆண்டின்  நவம்பர் வரை இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரிவர்த்தனை வசதி குறித்த ஒப்பந்தத்தில் இந்திய மத்திய வங்கி கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

இந்தியாவின்  இவ் ஒப்பந்தமானது கொரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மறுமலர்ச்சியில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என  இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளது. 

குறித்த கலந்துரையாடல் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையினால் மீளளிக்கப்படவேண்டிய கடன் கொடுப்பனவுகளை ஒழுங்கமைத்தல் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த 2020 ஜூலை 22 ஆம் திகதி இந்தியா இலங்கை இடையில் நடைபெற்றிருந்தது.

இந்திய நிதி அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் EXIM வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கும் இலங்கையின் வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் காணொளி மாநாட்டின் மூலமாக நடைபெற்றிருந்தது.

இருதரப்பினரைடையிலும் மிகவும் சுமூகமாகவும் நேர்மறையான சூழலிலும் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.

கடந்த 2020 மே 23 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவுடனும் கடந்த 2020 மே 27 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் 19 காரணமாக பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் சுகாதார பாதிப்புக்கள் குறித்து உரையாடியமை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இரு தரப்பினரும் அந்நெருக்கடி குறித்து கலந்திரையாடியுள்ளமையை இங்கு குறிப்பிட முடியும். அத்துடன் இந்த கலந்துரையாடல்களின்போது கொவிட் பெருநோயினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை முறியடிப்பதற்கு இந்தியா சகல சாத்தியமான ஆதரவையும் வழங்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்.

2020 மே 29 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மரியாதையின் நிமித்தம் சந்தித்திருந்தவேளையில் கொவிட்டுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் பங்களிப்பு மேலும் விஸ்தரிக்கப்படுமென இணங்கப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கை ஜனாதிபதியுடனான அந்த சந்திப்பின்போது இரு நாட்டு மக்களினதும் சமாதானம் பாதுகாப்பு மற்றும் செழுமை ஆகியவற்றுக்காக இலங்கையுடனான ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.

2020 மேயில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின்போதும் இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டிருந்த மரியாதையின் நிமித்தமான சந்திப்பின்போதும் அடையாளம் காணப்பட்ட பரஸ்பர முன்னுரிமை அடிப்படையிலான விடயங்களில் கவனம் செலுத்தும் வகையில் இரு தரப்பினரிடையிலுமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கொவிட் 19 பெருநோய் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை முறியடிப்பதற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இவ்வாறான தொடர்புகளை ஒழுங்கமைப்பதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்து அக்கறையுடன் செயலாற்றும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02