தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபாவை வழங்க ஏற்பாடு

Published By: Robert

08 Jul, 2016 | 09:19 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 2500 சம்­பள உயர்வை உட­ன­ டி­யாக வழங்­கு­வ­தற்கு அர­சாங் கம் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது என நேற்று சபையில் தொழி­ல­மைச்சர் டபிள்யூ.ஜே.எம்.சென­வி­ரட்ண தெரி­வித்தார்.

அதே­வேளை கூட்டு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் தொழில் அமைச்சு முன்­னெ­டுக்கும் என்றும் அமைச்சர் உறு­தி­ய­ளித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று தினேஷ் குண­வர்த்­தன எம்.பி.யினால் 23 கீழ் இரண்டில் எழுப்­பப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளி­களின் ரூபா 2500 சம்­பள உயர்வு தொடர்பில் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தனது பதிலில் மேலும் தெரி­விக்­கையில்,

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வரவு – செலவுத் திட்­டத்தில் அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 2500 சம்­பள உயர்வை பெரும்­பா­லான கம்­ப­னிகள் இது­வ­ரையில் வழங்­க­வில்லை. இது தொடர்பில் பிர­த­மரின் தலை­மை­யி­லான பொரு­ளா­தார அலு­வல்கள் தொடர்­பான முகா­மைத்­துவ குழு­விலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பெருந்­தோட்டக் கம்­ப­னி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

தற்­போது பெருந்­தோட்டத் துறையின் தற்­கா­லிக வீழ்ச்­சியைத் தொடர்ந்து வங்­கிகள் ஊடாக கம்­ப­னி­க­ளுக்கு கடன்­களை வழங்கி ரூபா 2500 சம்­பள உயர்வை தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க உட­ன­டி­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

கூட்டு ஒப்­பந்­தத்தை கையெ­ழுத்­தி­டவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். பெண் ஊழி­யர்­க­ளுக்­கான நலன்­பு­ரிகள் சுகா­தார சேவைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி குறைபாடுகள் நீக்கப்படும்.

தொழில் நியாய சபைகளில் உறுப்பினர்களுக்கு தமது பிரதிநிதிகள் ஊடாக விடயங்களை முன்வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59