ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோ­வி­லுள்ள பஸ் நிலை­ய­மொன்றில் வீட்டில் தயா­ரிக்­கப்­பட்ட குண்­டொன்று திங்­கட்­கி­ழமை இரவு வெடித்­ததில் 5 பேர் சிறு காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

மத்­திய மொஸ்­கோவில் மது­பான நிலை­யங்­களும் உணவகங்களும் அமைந்­தி­ருந்த பொக்­ரோவ்கா வீதி­யி­லுள்ள பஸ் நிலை­யத்­தி­லேயே இந்த வெடிப்புச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

மேற்­படி குண்டு காரொன்­றி­லி­ருந்தோ அல்­லது அரு­கி­லி­ருந்த குடி­யி­ருப்புக் கட்­ட­டமொன்றிலி­ருந்தோ வீசப்­பட்டு வெடிக்க வைக்­கப்­பட்டிருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இந்த சம்­பவம் தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து ள்ளனர்