முகக் கவசமும் அமெரிக்கர்களும்

Published By: Priyatharshan

23 Jul, 2020 | 10:04 PM
image

முகக்கவசம் அணிவது அவசியமா? இல்லையா? என்ற சர்ச்சை அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே வருகிறது.  ஒரு சில அமெரிக்கர்கள் அதனை அணிவதற்கு சாதகமாகவும் மற்றும் ஒரு பிரிவினர் பாதகமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் முகக் கவசம் அணிதல் குறித்தோ கொரோனா வைரஸ் தொற்று குறித்தோ அவ்வளவு தூரம் கவனம் செலுத்தவில்லை.

வெறுமனே இது சீன வைரஸ் என்று கூறி சீனாவையே தாக்கி கொண்டிருந்தார்.

எனினும் கொத்துக்கொத்தாக அமெரிக்க மக்கள் மடிய ஆரம்பித்ததை அடுத்து அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணியவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர்.

சீனப் பிரஜைகளைப் பொறுத்தமட்டில் சீனர்கள் சர்வசாதாரணமாக முகக் கவசம் அணிவது வழக்கம். அந்நாட்டில் வளிமண்டலம் மாசாக இருப்பதால் அதை அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். 

அவர்களை பின்பற்ற அமெரிக்க மக்கள் விரும்புவதில்லை. எனினும் கொரோனாவைரஸ் இருமல், தும்மல் மற்றும் காற்றில் பரவக்கூடியது என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிவது இன்றியமையாதது.

அந்த வகையில் உலகில்

அமெரிக்காவிலேயே பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவினால் பலியானதுடன்

பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அதனை உணர்ந்த நிலையில் அமெரிக்க மக்கள் முகக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளார். அதனைவிட வேறு

வழியுமில்லை.

இந் நிலையில்'

"நீங்கள் முகக்கவசம் அணிவதை விரும்புகின்றீர்களோ இல்லையோ முகக் கவசம் அணிவது முக்கிய தாக்கத்தை செலுத்தும் எனவே நான் எப்போதும் அதனை கைவசம் வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார் ட்ரம்ப். 

இன்றைய சூழலில் முகக்கவசம் அணிவது மிகவும் இன்றியமையாதது அது சகலவிதமான காற்றால் பரவும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

 இலங்கையர்களும் அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும் ஒரு சிலர் அதனை சரியான முறையில் முகத்தில் அணியாமல் ஏதோ நானும் முகக்கவசம் வைத்துள்ளேன் என்று காட்டுவது போன்று கழுத்தில்அணிந்து கொள்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி மிகவும்  கவலைக்குரிய விடயம் யாதெனில்  பிறருடைய  முகக் கவசத்தை வாங்கி தானும் அணிந்து கொள்வதாகும் .இத்தகைய செயல்கள் வினையை விலை கொடுத்து வாங்கிய நிலைக்கேகொண்டு சென்று நிறுத்தும். 

எனவே நோயின் தீவிரத்தை உணர்ந்தும் நம்மை நாம் காக்க வேண்டிய அவசியத்தை எண்ணிப் பார்த்தும் அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54