வடிவேல் சுரேஸை பெருந்தோட்டத் துறை அமைச்சராக நியமிப்பேன் - சஜித் உறுதி

23 Jul, 2020 | 10:00 PM
image

(செ.தேன்மொழி)

பெருந்தோட்டதுறை மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை தங்களது ஆட்சியில் முன்னெடுப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அவர்களது நன்றிக் கடனை தீர்க்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸை பெருந்தோட்ட துறை அமைச்சராக நியமிப்பதாகவும் கூறினார்.

பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தி சாதாரண மக்களின் நலனை பெற்றுக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தில் பணம் இல்லை, பிள்ளைகளுக்கு உணவு பெற்றுக் கொடுப்பதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுப்பெற்றுக் கொடுப்பதற்கு வழியில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு பூராகவும் சென்று தேவையற்ற பிரச்சினைகளை பேசிவருகின்றார். மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பினால் அவர், வேறு சிந்தனையில் இருக்கின்றார். 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதாக தெரிவித்த  1000 ரூபா அடிப்படை சம்பளத்தை இந்த அரசாங்கம் கொடுத்துள்ளதா? நாங்கள் 1500 பெற்று தருவதாக தெரிவித்தோம். அதனை கட்டயாம் செய்வோம். ஜனாதிபதி தேர்தலின் போது நீங்கள் எமக்கு பெற்றுக் கொடுத்த ஆதரவை நாங்கள் மறக்கவில்லை. இதற்கான நன்றிக்கடனை நாங்கள் செலுத்துவோம். 

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலாளர்களாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. உங்களை முன்னேற்றுவதே எமது நோக்கம். ஒரு வருடத்திற்கு எரிபொருள் விலையை மாற்றுவதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலயத்தில் எரிப் பொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று பெருந்தோட்ட துறை அமைச்சு பொறுப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்க்கு பெற்றுக் கொடுப்போம். என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14