ஐ.தே.க. வின் அடுத்த தலைவர் இரகசிய வாக்கெடுப்பினூடாகவே தெரிவுசெய்யப்படவேண்டும் - நவீன்

Published By: Digital Desk 3

23 Jul, 2020 | 04:02 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவர் இரகசிய வாக்கெடுப்பினூடாகவே தெரிவுசெய்யப்படவேண்டும். கட்சியின் யாப்பின் பிரகாரம் அதுமேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா கினிகத்தேன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவரை இரகசிய வாக்கெடுப்பொன்றினூடாகவே தெரிவுசெய்யப்பவேண்டும். இரகசிய வாக்கெடுப்பு என்பது முட்டிமோதிக்கொண்டு மேற்கொள்வதல்ல. ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும். ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்துவரும் கட்சியாகும். 

அத்துடன் இரகசிய வாக்கெடுப்பு கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி பிளவுபடாமல் மேற்கொள்ளப்படும். 2011இல் சஜித் பிரேமதாச கட்சியின் பிரதி தலைவராக தெரிவுசெய்யப்பட்டதும் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகும். அப்போது கட்சி பிளவுபடவில்லை. அதனால் இரகசிய வாக்கெடுப்பு என்பது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடியதொன்று அல்ல. மாறாக கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிப்பதற்கு இருக்கும் சிறந்த முறையாகும்.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை  திரும்ப திரும்ப வெளிக்கொண்டுவருவது அரசியல் சேறு பூசுவதற்காகும். பிணைமுறி தொடர்பான அறிக்கையொன்று வந்திருக்கின்றது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.

அதேபோன்று புவனேக்கபாகு மன்னனின் அரச சபை இடிக்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும். இதனை மேற்கொண்ட குருணாகல் நகர பிதா இன்னும் சுயாதீனமாக செயற்படுகின்றார். நாட்டின் கலாசாரம், புராதன சின்னங்களை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்களே தற்போது அதனை அழித்துவருகின்றனர். அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு குருணாகல் நகரபிதாவை கைதுசெய்யவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50