பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும் - ரணில் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

23 Jul, 2020 | 03:13 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தேசியத்தும் குறித்து எமக்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் அறிவர். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களின் அடிப்படைவாதிகள் எம்முடன் பங்குதாரர்களாக இல்லை என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி எதிர்மறை எண்ணாகவே காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் உண்மைகளை மறைப்பதோடு தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் மக்கள் உணரும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்நதும் கூறுகையில் ,

தேசிய வளங்கள் மற்றும் புராதன மரபுரிமைகளை பாதுகாக்க வந்த அரசாங்கம் தற்போது தொல்பொருள் சட்டத்திற்கே சவால் விடுத்துள்ளது. 2 ஆம் புவனேகுபாகு மன்னனின் அரசவை மண்டபம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உள்ளனர் என்பதே உண்மையாகும். அந்த சம்பவத்தையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பலைகளினால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

2001 ஆம் ஆண்டு 1.6 மேலாண்மை எதிர்மறை எண்ணாக வீழ்ச்சிக் கண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சி 7 வீத வளர்ச்சி புள்ளியை நோக்கி கொண்டுச் சென்றது. தற்போதைய தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி எதிர்மறை எண்ணாகவே காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உண்மைகளை மறைக்கிறது. தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் மக்கள் உணரும் நிலை ஏற்படும்.

கடன் பெற்றுக் கொள்ள கூடிய எந்தவொரு மூலமும் அரசாங்கத்திற்கு தற்போது கிடையாது. 7. 5 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி இருப்புடனேயே ஆட்சியை பொறுப்பளித்தோம். அந்த தொகையினை 7 மாத காலப்பகுதிக்குள் 4. 5 பில்லியனுக்கு குறைத்துக் கொண்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. நாட்டு மக்களுக்கு போலியான தகவல்களையே தெரிவித்து வருகின்றது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. மக்களின் பாதுகாப்பு குறித்து எவ்விதத்திலும் சிந்திக்க வில்லை. மத்திய கிழக்க நாடுகளில் மாத்திரம் 35 ஆயிரம் பேர் வர முடியாமல் உள்ளனர். டுபாயில் மாத்திரம் 18 ஆயிரம் பேர் உள்ளனர். வீசா இன்றியும் தொழிலிழந்து மற்றும் உண்ண உணவின்றி சுமார் 7 ஆயிரம் பேர் வரையில் சிக்குண்டுள்ளனர்.  அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் ஏற்பட கூடிய விமான எரிப்பொருள் செலவு மற்றும் பி.சி.ஆர் பரிசோதணை உள்ளிட்ட மருத்து செலவுகளுக்கு பெரும் தொகை நிதி செலவாகும் என்பதால் வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதை தவிர்த்து அங்கேயே அவர்களை மரணிக்க வைப்பதாகவே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வீழ்ச்சியும் அதனால் மக்கள் எதிர்கொள்ள கூடிய சவால்கள் குறித்துமே பேசுகின்றோம். தேசியத்தும் குறித்தும் எமக்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் அறிவர். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களின் அடிப்படைவாதிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இல்லை. 2015 ஆம் ஆண்டின் பின்னர் அனைத்து இனங்களையும் சமநிலையில் நடத்தினோம். இதனை மக்கள் அறிவர் என்றும் அவர் குறிப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17