எகிப்திய சிறைகளில் கொரோனாவுடன் போராடும் கைதிகள் - மனித உரிமைக் குழுக்கள் கவலை

Published By: Vishnu

23 Jul, 2020 | 09:28 AM
image

கொரோனா பரவல் காரணமாக எகிப்திய சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறது.

எகிப்தில் குறைந்தது 14 கைதிகள் சிறைச்சாலைக்குள் உயிரிழந்துள்ளனர். ஜூலை 15 நிலவரப்படி பெரும்பாலும் 10 தடுப்புக் காவல் நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இருக்கலாம் என்று திங்கட்கிழமை ஐ.நா.வின் மனித உரிமைகள் காண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கைதிகள் கொவிட்-19 அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணங்களினால் அவர்களிடையே மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

அறிகுறிகளைக் காட்டும் கைதிகளை தனிமைப்படுத்த அதிகாரிகள் சிறிதும் நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் கடுமையான தகவல்களை இருட்டடிப்பு செய்துள்ளதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட  மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், எகிப்திய பத்திரிகையாளர் மொஹமட் மோனீர் கெய்ரோவின் மோசமான டோரா சிறையில் தடுப்புக்காவலில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

அதேநேரம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளரான அம்ர் மாக்தி அல் ஜசீராவிடம், இதுவரை மூன்று கைதிகள் டோரா தஹிக் சிறையில் கொவிட்-19 காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதேபோல் ஜெனீவாவை தளமாகக் கொண்ட நீதிக்கான குழு, எகிப்திய சிறைகளில் கொரோனாவினால் பாதிக்கபட்டோர் என்ற சந்தேகத்தில் 149 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17