ரவியை திங்களன்று சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு உத்தரவு : கோட்டை நீதிவான் நீதிமன்றம்  விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை

23 Jul, 2020 | 10:01 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை விசாரணைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று சி.ஐ.டி.யில் ஆஜராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, சி.ஐ.டி.யினருடன் கோட்டை மன்றில் ஆஜராகி முன்வைத்த விஷேட கோரிக்கையை ஏற்றே, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்துவதை நிறுத்தி  மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் தமக்கு எதிரான பிடியாணை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்தே, மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

எவ்வாறாயினும் அந்த உத்தரவில் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த சி.ஐ.டி. விசாரணைகளுக்கு எவ்வித தடையும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள  மேன் முறையீட்டு நீதிமன்றம், சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் சந்தேக நபர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள நிலையில், சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்வாறு சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்து, அது குறித்த அறிக்கையை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட  ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 எவ்வாறாயினும் இது தொடர்பில் வாக்கு மூலம் பெற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சி.ஐ.டி.யில் ஆஜராக பல முறை அழைத்த போதும் அவர் அங்கு வரவில்லை எனவும் அதற்கு பல காரணங்களை அவர் கூறிவருவதாகவும் சி.ஐ.டி.யினருடன் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்தார். 

அத்துடன் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றினை மையப்படுத்தி அவர் விசாரணைக்கு வராமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்,  வேட்பு மனு தாக்கல் செய்தமைக்காக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சட்ட ரீதியாக எந்த தடங்கல்களும் இல்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

 அவ்வாரு அவர் வேட்பாளர் என்பதால் இக்காலப்பகுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் இருந்தால் அது தவறான முன்னுதாரணமாக கூட அமையலாம் என அவர் தெரிவித்தார். 

இந் நிலையிலேயே விடயங்களை ஆரயந்த நீதிவான் ரங்க திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி திங்களன்று ரவி கருணாநாயக்கவை சி.ஐ.டி.யில் ஆஜராக உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31