இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷாலின் தூஸ்ரா பந்துவீச்சு முறை தொடர்பாக கவணம் செலுத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தரிந்து கௌஷால் பந்துவீச்சு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது.  

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் வீசிய 18 தூஸ்ரா பந்துவீச்சில் 9 தூஸ்ரா பந்துவீச்சு  ஐ.சி.சி. விதிக்கு மாறாக முழங்கை 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து வீசியமை உயிர்விசையியல் (biomechanical) சோதனை மூலம் தெரிய வந்தது.  இதனால் தரிந்து கௌஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கட்டின் உயர் செயல்திறன் முகாமையாளர் சிமோன் வில்லிஸ் கூறுகையில் “தரிந்து கௌஷால் கடந்த 4 வாரங்களாக தனது பந்து வீச்சு தொடர்பாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் அவரது பந்துவீச்சு தொடர்பில் 2 சிறிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம்.  இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கொள்ள முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.