2 ஆம் புவனேகபாகு அரச மண்டப உடைப்பு விவகாரம் : இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

22 Jul, 2020 | 06:28 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

குருநாகலை புவனேக ஹோட்டல்  நடத்தப்பட்ட   கட்டிடம் சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்களை  சட்டத்தின் முன்  முன்னிலைப்படுத்த  வேண்டும். கட்டிடத்தை புனரமைப்பதற்கான வசதிகளை பொறுப்புக்  கூற வேண்டியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும்.  என  பிரதமரால் நியமிக்கப்பட்ட ஐவர்  அடங்கிய  குழுவினர் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்கள்.

குருநாகலை புவனேக ஹோட்டல்   நடத்தி செல்லப்பட்ட   கட்டிடம்   இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கை   இன்று  புதன் கிழமை அலரி மாளிகையில் வைத்து பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவிடம்   கையளிக்கப்பட்டது.  அறிக்கையில்  5   பரிந்துரைகளும்   முன்வைக்கப்பட்டுள்ளன.

  கட்டிடத்தின்   முன்பகுதியிற்கும்இ ஜன்னல்  பகுதிக்கும்  சேதம்  ஏற்பட்டுள்ள நிலையில்   அதனை  தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில்   பாதுகாக்கப்பட வேண்டியது.   கட்டிடத்தில்  பிற்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ள நிலையிலும்,  அங்கிருந்த  புராதான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

இவ்விடயம்   தொடர்பில் இதற்கு முன்னர்  தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளதால் கட்டிடத்தை மீண்டும் புனரைக்க கூடிய  சாத்தியப்பாடு  காணப்படுகின்றன.  புனரமைப்பு  பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

  இக்கட்டிடத்தை தொல்பொருள்   திணைக்களத்தின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர  வேண்டும்.

   இக்கட்டிடம்  அமைந்துள்ள   பகுதியை  விரிவாக்க   கொண்டுவரப்பட்ட யோசனையில் திருத்தம் கொண்டு வருமாறு வீதி அபிவிருத்தி அதிகார  சபைக்கு ஆலோசனை வழங்குதல்.

கட்டிடத்தை சேதமாக்கியவர்கள் தொடர்பில் பொறுப்பு கூ ற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.

  இக்கட்டிடத்தை  சேதமாக்கியமைக்கு  பொறுப்பு கூற வேண்டிய  நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து அதனை மீள புனரமைப்பதற்கான    வசதிகளை பெற்றுக் கொள்ளல்.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம்   தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தலைமையில்  ஐவர் அடங்கிய  கு ழு   கடந்த  வாரம்  நியமிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15