புத்தளம்: கற்பிட்டி வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

22 Jul, 2020 | 02:26 PM
image

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் கல்குடாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி தலவில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பாலாவி பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கல் ஒன்று எதிரே வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் இவ்விபத்தில் படுகாயமடைந்ததுடன், அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36