அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை

Published By: Vishnu

22 Jul, 2020 | 02:20 PM
image

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில்  கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் 7.8 ரிச்டர் அளகோலில் பதிவாகியுள்ளமையினால் குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 6.12 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது 500 மைல் தூரத்திலுள்ள ஏங்கரேஜ் வரை உணரப்பட்டு, பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு தென்கிழக்கு 60 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள 200 மைல் தூரம் சுனாமியின் எச்சரிக்கை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக உண்டான சேத விபரங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59