கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்ற அதிசயப்பெண் 

Published By: Digital Desk 3

22 Jul, 2020 | 12:41 PM
image

பெண்ணொருவர் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குள் ஆண் குழந்தையை பிரசவித்த அதிர்ச்சிகர சம்பவமொன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியைச் சேர்ந்த திருமணமான 28 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான ஹெனி நூரேனி என்றவருக்கே இவ்வாறு அதிய பிரசவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அவர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன்.

இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன.  ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், பண்டுங் ஹசன் சாதிகின் வைத்தியசாலை மகப்பேறு நிபுணர் வைத்தியர் ருஷ்வானா அன்வர், 

கர்ப்பமாக இருக்கும் 25,000 பதிவுகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம், இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம்.

இருப்பினும் ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம், தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52