பிரதியமைச்சர் பாலித தெவரபெரும உள்ளிட்ட 13 பேருக்கு பிணை வழங்கி மதுகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீகதென்ன ஆரம்ப பாடசாலைக்கு முன் தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 9 தாய்மார்களை கடந்த செவ்வாய்க்கிழமை (05) பொலிஸார் கைதுசெய்தனர்.

அதுமாத்திரமின்றி பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் தற்கொலை செய்ய முற்பட்டமை மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதி அமைச்சர் உட்பட நால்வர் செவ்வாய்க்கிழமை (05) மாலை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் மதுகம நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த 13 பேரையும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க மதுகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிரதி அமைச்சர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதுகம நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.