அமெரிக்கா- இந்தியாவில் அதிக கொரோனா பரிசோதனைகள் முன்னெடுப்பு

Published By: Digital Desk 3

22 Jul, 2020 | 02:48 PM
image

அமெரிக்கா அதிக கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளதோடு, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா 50 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகளை இந்தியா செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 140,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதோடு, 3.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்க பொருளாதாரம் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கையில், தொற்றுநோய் இப்போது நாட்டின் சன் பெல்ட்டில் பரவி வருகிறது.

"ஒரு குடும்பமாக, இழந்த ஒவ்வொரு விலைமதிப்பற்ற வாழ்க்கையையும் நாங்கள் துக்கப்படுத்துகிறோம். நாங்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்குவோம், வைரஸை தோற்கடிப்போம் என்று அவர்களின் மரியாதைக்கு உறுதியளிக்கிறேன்.

தடுப்பூசி மற்றும் சிகிச்சையளிப்பதில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம், ”என்று ட்ரம்ப் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் வரும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். கேள்வியொன்றுக்கு பதிலளித்த ட்ரம்ப், கொவிட் -19 சோதனையின் அடிப்படையில் அமெரிக்கா “உலகை வழிநடத்துகிறது” என்றார்.

"சீன வைரஸ்", ஒரு தீய மற்றும் ஆபத்தான நோய் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"இது ஒரு மோசமான, பயங்கரமான நோய், இது சீனாவிலிருந்து ஏனைய நாடுகளுக்கு பரவவிட்டதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆனால் சீனா அதனை செய்தது. இது தற்போது உலகத்தை பாதித்துள்ளது. உலகம் பாதிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் உலகத்தை  பாதுகாத்துக்கொள்ளப் போகின்றோம் . மேலும் பல நாடுகளுக்கு நாங்கள் உதவுகிறோம், ”என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13