பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் பத்து மாணவர்களும் ஒரு ஊழியருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.