ரஞ்சித் மத்துமபண்டாரவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு : 25 ஆயிரம் ரூபா வழக்குக் கட்டணம் செலுத்தவும் உத்தரவு

22 Jul, 2020 | 09:46 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவும், அம்முடிவு அமுல் செய்யப்படுவதை தடுத்து  இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின்  தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்துமபண்டார மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுவினை விசாரணைக்கு ஏற்காமலே நிராகரிக்க நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

 

அத்துடன் வழக்குக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவை செலுத்தவும் மனுதாரரான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாலர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 99 பேரை கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்த  அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை அமுல் செய்வதை தடுத்து  இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை கடந்த ஜூன் 22 ஆம் திகதி  நிராகரிக்கப்பட்டது. 

அதற்கு எதிராக அவர் மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனு கடந்த ஜூலை 6,7 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் ஜனாதிபதி சட்டத்தணி இக்ராம் மொஹம்மட் , ஐ.தே.க. கட்சியின் செயலர் சார்பில் ஜனடஹிபதி சட்டத்தரணி ரோலன்ட் பெரேரா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையிலேயே நேற்று  குறித்த மேன் முறையீட்டை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா  என அறிவிக்க திகதி குறிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படியே மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றின் நீதிபதிகளான சம்பத் அபேகோன் மற்றும்  மொஹம்மட் லபார் தாஹிர் ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம்  நேற்று இந்த மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிப்பதாக அறிவித்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04