ரவி, ரிஷாத்துக்கு எதிரான பொலிஸ் விசாரணைகளை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 

21 Jul, 2020 | 08:24 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் வக்களிப்பு தினம் முடியும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கடந்தவாரம் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தில், ஏற்கனவே 15 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பட்ட ரிஷாத் பதியுதீன் தொடர்பிலான விடயத்துக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர் ரவி கருணானாயக்க தொடர்பிலும் குறிப்பிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்களிப்பு முடியும் வரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.

இந்த கடிதமானது, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கும்,  தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர்,  சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 இன் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையிலும், நேற்றைய தினம் முற்பகல் 9.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சி.ஐ.டி. குற்றவியல் சட்டத்தின் 109 ( 6) ஆம் அத்தியாயத்தின் கீழ் அறிவித்தல் அனுப்பியிருந்தது. 

சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிகளில் ஒருவரான பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகேயின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டிருந்த அக்கடிதத்தில், குறித்த அறிவித்தல் படி சி.ஐ.டி.யில் ஆஜராகாமல் இருப்பின் அது தண்டனை சட்டக் கோவையின் 172 ஆவது அத்தியாயம் பிரகாரம் தண்டனைக் குறிய குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மன்னார் பொலிசார் ஊடாக அந்த அறிவித்தல் நேற்று முன் தினம் 19 ஆம் திகதியே கையளிக்கப்பட்டிருந்தது.

 எவ்வாறாயினும் குறித்த அறிவித்தல் பிரகாரம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று சி.ஐ.டி.யின் ஆஜராகவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது 2019 ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் விவகாரத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும்,  சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்புடைய விவகாரத்தில் விசாரணைகள் நடாத்தப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகள் சி.ஐ.டி.யினரால் முன்னெடுக்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11