சிறுவன் பலி : நோன்பு பெருநாளன்று நிகழ்ந்த சோக சம்பவம்

07 Jul, 2016 | 01:13 PM
image

நோன்பு பெருநாளான நேற்று மூதூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுவன் உயிரிழந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை மலையடியில் நேற்று மாலை, முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பாலத்தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த ஹாபிஸ் இஜாஸ் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 இந்த விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற அதன் உரிமையாளரான பாலத்தோப்பூரைச் சேர்ந்த ஹனீபா அஷ்ரப் (வயது 42) என்பவர் படுகாயமடைந்த நிலையில்  மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 மேற்படி முச்சக்கர வண்டிக்காரர், தனது சிறுவன் மற்றும் தனது மைத்துனரின் மூன்று சிறுவர்களையும் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு பாலத்தோப்பூரிலிருந்து மூதூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது 3ஆம் கட்டை மலையடி பகுதியில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்துள்ளது.  

அதில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும்  சிறுவனுமே பாரதூரமான காயங்களுக்குள்ளாகிய நிலையில், வீதியில் சென்றோரால் மீட்கப்பட்டு, மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் சிகிச்சை பலனின்றி சிறுவன்  உயிரிழந்துள்ளான்.     நோன்புப் பெருநாளன்று, சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளமை தோப்பூர் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. 

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை திருகோணமலை, அலஸ்தோட்டப் பகுதியில்  புதன்கிழமை  இரவு  8 மணியளவில், இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில்  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 துவிச்சக்கர வண்டியுடன் - மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை-பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (வயது 62) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

நிலாவெளிப் பகுதிக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09