13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்போம் -  சஜித் 

Published By: Digital Desk 4

20 Jul, 2020 | 09:40 PM
image

(நா.தனுஜா)

ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகும் அதேவேளை, சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும். 

அந்தவகையில் நாட்டுமக்கள் அனைவரினதும் சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதை பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பொதுத்தேர்தலின் ஊடாக நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஒருமித்த நாட்டிற்குள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.

பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு உறுதியளித்த சஜித் பிரேமதாஸ அங்கு மேலும் கூறியதாவது,

மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகக்கூடிய வகையில் சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி அரச நிர்வாகத்திற்கு தூரநோக்கு சிந்தனையும், எதிர்காலத்தில் நிகழத்தக்க எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான எதிர்வுகூறலும் ஆயத்தமும் காணப்பட வேண்டும். சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதை முன்நிறுத்தி கொள்கை ரீதியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றையே நாம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 

ஒருமித்த நாட்டிற்குள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அதில் 13 பிளஸ் அல்லது 13 மைனஸ் என்பவை இல்லை. ஒவ்வொருவருக்கு ஏற்றவாறு முரணான வகையில் செயற்படும் தன்மை எம்மிடமில்லை.

எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37