தேர்தலில் முஸ்லிம்கள் ரணில், சஜித்துக்கு சிறந்த பாடம் புகட்டுவர்: மர்ஜான் பளீல்

Published By: J.G.Stephan

20 Jul, 2020 | 05:30 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் செயற்பாடுகளை எமது சமூக அரசியல்வாதிகள் கைவிட வேண்டும். எமது மக்கள் இவர்களுக்கு தேர்தலில் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேருவளை மருதானை, சீனன்கோட்டை பிரதேச முஸ்லிம் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பேருவளை தொகுதி அரசியல்வாதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் எமது சமூகம் சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும். இவர்களின் செயற்பாடுகளாலே முஸ்லிம் சமூகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

அன்று தர்கா நகர் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை வீட்டிற்கு அனுப்பினார்களோ அதே பேருவளைத் தொகுதி மக்கள் இம்முறை தேர்தலில் ரணில், சஜித் தரப்பினருக்கு சிறந்த பாடத்தை புகட்ட முன்வந்துள்ளதை பாராட்டுகிறேன். தர்கா நகர் மக்களின் செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதை பாராட்டுகிறேன்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்விடம் இனவாதம் இல்லை என்பதை எமது மக்கள் விளங்கிக்கொண்டுள்ளனர். உண்மையான இனவாதிகள் யார் என்பதையும் அவர்கள் இன்று தெரிந்து வைத்துள்ளனர். தர்கா நகர் சம்பவத்துக்கு பின்னால் இருந்த ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள்  இன்று யாருடன் கூட்டு சேர்ந்துள்ளனர் என்பதை சமூகம் சிந்திக்க வேண்டும். 

அதனால் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தை அதிகப்படியான வாக்குகளினால் வெற்றிபெறச்செய்து, முழு இலங்கைக்கும் முன்மாதிரியான செய்தியை வழங்கவேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44