தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன - மாவை 

Published By: Digital Desk 4

20 Jul, 2020 | 04:55 PM
image

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சிதைவடையச் செய்வதற்காக பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இதனை மக்கள் தடுக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மண்டைதீவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்ததுடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு வகையான வேலைத்திட்டங்களையும் முன்னொடுத்து வந்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள் தமிழத்தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் என்ன செய்தது என்று கேட்கின்றது நாங்கள் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட காலம் முதல் இறுதிவரை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பைச் செய்து இறுதிவரை அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம்.

அதுமட்டுமன்றி எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு வடக்கு கிழக்கில் அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம் அவ்வாறான நிலையில் நாங்கள் முற்றுமுழுதாக எதையும் செய்யவில்லை என்றே முழுமையாக செய்து விட்டோம் என்று நாம் கூறவில்லை பலவிதமான முயற்சிகளில்  ஈடுபட்டுள்ளோம் என்பதையேநாங்கள் கூறுகின்றோம்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பை  பிரித்தாழ்வதற்காக சிதைவடையச் செய்வதற்காக பல தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த விடையத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் நாங்கள் ஒருமித்து ஒரோ பலமாக இருந்து செயற்படுவதன் மூலம் தான் எங்களுக்குரியதை மக்களுக்கானதை பெற்றுக்கொள்ளமுடியும் .

இன்றுள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஜனநாயகப்போராட்டம் ஆயுதப் போராட்டம் என மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்த நாம் எங்களுக்கு இருந்த மிகப் பலம்வாய்ந்த ஆயுதப்போராட்டம் இன்று இல்லை இன்று இருப்பது ஜனநாயப்போராட்டமே இதனை நாங்கள் பயன்படுத்தவேண்டும் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானங்களை நிறறைவேற்றுவதற்காக நாங்கள் ஒருமித்து செயலாற்றவேண்டும்.

ஐ.நாபேரவையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாகக் கூறினாலும் அவ்வாறான நிலை ஏற்படாது இந்தத் தீர்மானங்கள் ஒருவர் இருவரால் உருவாக்கப்பட்டது அல்ல பல நாடுகளின் ஒத்துழைப்புடன் அதிலும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டு வரப்பட்டது.

எனவே  இந்தச் சந்தர்ப்பபத்தை நாங்கள் முழமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் இந்தத் தேர்தலில்  தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைபை பலப்படுத்துவதற்கு அவர்களுக்குள்ள ஜநாயகப் பலத்தை ஒருமித்துக் காண்பிக்கவேண்டும். இன்றைய ஜனாதிபதி சிங்களப் பெளத்த பெரும்பான்மையின் வாக்குகளால் ஆட்சியில் அமர்ந்துள்ளமையினால் அத்தகையவர்களின் ஆட்சிக்கமைய புதிய அரசியல் அமைப்பை உறுவாக்கவேண்டும் என கூறிவருகின்றார்கள்.

 அவ்வாறான சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்கப்கூடாது இதற்க தமிழ்மக்கள் தங்கள் வாக்குப்பலத்தை சிதறடிக்காது தமிழ்த்தேசியகக்கூட்டமைப்புக்கே வாக்களிக்கவேண்டும் தேர்தல் தினத்தன்று நேரகாலத்துடன் வாக்களிக்கும் நிலையம் சென்று வீட்டுச் சின்னத்திற்குநேரே புள்ளடி இடுவதுடன் விரும்பிய மூவருக்கும் புள்ளடியிடவேண்டும். அதிலும் குறிப்பாக பெண்பிரதிநிதியாக திருமதி சசிகலா ரவிராஜ்க்கு புள்ளடியிட்டு அவரையும் வெற்றிபெற வைக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33