பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை குறித்து அறிவிப்பு

Published By: Digital Desk 3

20 Jul, 2020 | 04:09 PM
image

(எம்.மனோசித்ரா)  

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான வினாத்தாள்கள் முழு பாடப்பரப்பையும் உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டுள்ளதெனவும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராக வேண்டுமெனவும்  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.  

இதேவேளை, நாடளாவிய சகல பாடசாலைகளையும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்தோடு கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையினை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்திரானந்த தெரிவித்தார்.

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்  செயலாளர் சித்திரானந்த மற்றும்  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்  செயலாளர் சித்திரானந்த மேலும் கூறுகையில் ,

உயர்தரம் , புலமைப் பரிசில் பரீட்சைகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சைகளை செப்டெம்பர் 7 ஆம் திகதி உயர்தர பரீட்சைகளையும் 13 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையினையும் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் வைரஸ் பரவல் தீவிரமடைந்ததையடுத்து மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டியேற்பட்டது. அத்தோடு ஆரம்பத்தில் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்ட போது அந்த திகதியை மேலும் நீடிக்குமாறு பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கமைய செப்டெம்பர் 28 ஆம் திகதி உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் பலரின் கோரிக்கைக்கு ஏற்ப மேலும் ஒரு மாத காலம் தாமதித்து பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சைகளுக்கு இன்னும் கால அவகாசம் காணப்படுவதால் அது பற்றி எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

இரண்டாம் தவணை விடுமுறை

இதன் போது இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெளிவுபடுத்துகையில் ,

வழமையாக இரண்டாம் தவணை பரீட்சைகள் ஜூலை மாதத்தின் இறுதியில் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் முதலாம் வாரத்தில் விடுமுறை வழங்கப்படும். எனினும் தற்போதைய சிக்கல் நிலைமையைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்கள்

பரீட்சைகள் வினாத்தாள் தயாரிப்பு குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெளிவுபடுத்துகையில் ,

மார்ச் மாத காலப்பகுதியில் நாடு முழுமையாக முடக்கப்பட்ட போது கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தாலும் அதன் பின்னர் இணையதளம் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனவே உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான வினாத்தாள்கள் முழு பாடப்பரப்பையும் உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராக வேண்டும்.

தற்போது பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை திணைக்கள உத்தியோகபூர்வ இணையதளத்தில் சுட்டேண் மூலம் பெறுப்பேற்று சான்றிதலொன்றை 48 மணித்தியாலங்களில் முடியும். இது உத்தியோகபூர்வமான ஆவணமாகும். எனவே இதனை நேர்முகத் தேர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்

எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இதன் போது 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர். ஏனைய வகுப்புக்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட எந்தவொரு பாடசாலையையும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முன்னர் திறக்காமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04