நுளம்புகளால் கொரோனா வைரஸை பரப்ப முடியாது - ஆய்வில் தகவல்

Published By: Digital Desk 3

20 Jul, 2020 | 01:10 PM
image

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை நுளம்புகளால் மனிதர்களுக்கு பரப்ப முடியாது என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

நுளம்புகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்வி கடந்த ஆறு மாதங்களாக உலகளவில் மில்லியன் கணக்கானவர்களிடம் எழுந்துள்ளன.

ஆனால் சமீபத்திய ஆய்வில், கொவிட்-19 எனப்படும் SARS-CoV-2 என்ற வைரஸை நுளம்புகள் மனிதர்களுக்கு கடத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க கன்சாஸ் மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு அறிவியல் அறிக்கை இதழில் வெளியிடப்பட்டது.

இது முதல் உறுதியான சோதனை விசாரணையை வழங்குகிறது, SARS-CoV-2 ஐ நுளம்புகளால் பரப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

"உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) நுளம்புகளால் வைரஸைப் பரப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், கோட்பாட்டை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை வழங்குவது எங்கள் ஆய்வுதான்" என்று அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ஆதாரங்களைத் தேடும் முயற்சியில், ஆராய்ச்சி குழு SARS-CoV-2 இன் பொதுவான மற்றும் பரவலாக விநியோகிக்கப்பட்ட மூன்று வகை நுளம்புகளான ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் மற்றும் குலெக்ஸ் குயின்கேபாஸியாட்டஸ் ஆகிய நுளம்புகள் மீது சோதனை நடத்தப்பட்டது.

முதல் இரண்டு இனங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன. குலெக்ஸ் குயின்கேபாஸியாட்டஸ் நிணநீர் யானைக்கால் மற்றும் சில வகையான மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களை பரப்புகிறது.

இந்த மூன்று நுளம்புகளும், கொரோனா வைரஸ் அவைகளில் எதையும் பிரதிபலிக்க முடியவில்லை என  ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

நோய்த்தொற்று ஏற்படுவதற்கு ஒரு நுளம்பு வைரஸ் உள்ள இரத்தத்தை உண்ண வேண்டும். இருப்பினும், பாதிக்கப்பட்ட இரத்தத்தை நுளம்புளுக்கு உணவாக அளிப்பதைவிட, நாங்கள் உண்மையில் நுளம்புகளில் வைரஸை செலுத்தினோம்” என்று ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் இதைச் செய்ததற்குக் காரணம், நுளம்புகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான தீவிர சோதனை ஆகும். ஒருவருக்கு உட்செலுத்தும்போது வைரஸ் வளரவில்லை என்றால், ஒரு நபரின் இரத்தத்தை ஏராளமான வைரஸ் உள்ள ஒரு நுளம்புக்கு குடிக்க அளித்தாலும் அதன்வழியாக அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நம்பலாம்” என்று ஹிக்ஸ் கூதெரிவித்துள்ளார்.

புதிய ஆய்வைத் தவிர, இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனமான ஐ.எஸ்.எஸ்ஸின் முந்தைய விஞ்ஞான ஆய்வில் நுளம்புகளால் மனிதர்களுக்கு கொரோனா வைரஸை கடத்த முடியவில்லை என்பதை வெளிப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34