117 நீதி­ப­தி­க­ளுக்கு ஜன­வரி முதல் இட­மாற்­றம் 

Published By: MD.Lucias

09 Dec, 2015 | 10:14 AM
image

சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் முக்­கி­ய­மான பல வழக்­குகள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­வோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

நீதிச் சேவை ஆணைக்குழு வழங்­கி­யுள்ள குறித்த இட­மாற்­றங்­களின் பிர­காரம்,

தற்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதி­ப­தி­யாக கட­மை­யாற்றும் டி.எல்.ஏ.மனாப் வவு­னியா மாவட்ட நீதி­ப­தி­யாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார். கல்­முனை மாவட்ட நீதிவான் எம்.பி.மொஹிதீன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதி­வா­னாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி அப்­துல்லாஹ் திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­வா­னா­கவும், பருத்தித் துறை மாவட்ட நீதிவான் கணே­ச­ராஜா மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்றப்பட்­டுள்­ளனர்.

அத்­து­டன் ­வ­வு­னியா மாவட்ட நீதி­ப­திவீ.ராம­க­மலன் கல்­முனை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும், திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­பதி டி.ஜே.பிர­பா­கரன் கிளி­நொச்சி மாவட்ட நீதி­ப­தி­யா­கவும், கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஜூட்சன் மல்­லாகம் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றின் மேல­திக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் ஊர்­கா­வற்­றுறை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் வாழைச்­சேனை மாவட்ட நீதி­பதி எம்.ஐ.எம்.றிஸ்வி மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றின் மேல­திக நீதி­வா­னா­கவும், மல்­லாகம் மாவட்ட நீதி­பதி சதீஷ்­தரன் யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும், யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பி. சிவ­குமார் பருத்தித் துறை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

அத்­து­டன் ­மல்­லாகம் மேல­திக மாவட்ட நீதி­ப­தி­யாக உள்ள திரு­மதி ஜே.கருப்­பையா யாழ். சிறுவர் நீதி­மன்றின் நீதி­ப­தி­யா­கவும் பொத்­துவில் மாவட்ட நீதி­பதி ஐ.பி.ரஸாக் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும் ஊர்­கா­வற்­றுறை மாவட்ட நீதி­பதி எஸ்.லெனின்குமார் வவு­னியா மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கவும் மாற்­றப்­பட்டுள்­ளனர்.

அத்­துடன் வவு­னியா மேல­திக மாவட்ட நீதி­பதி ஏ.சி.ரிஸ்வான் வாழைச்சேனை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­பதி எச்.எம்.எம்.பசீல் சம்­மாந்­து­றை நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும் கிளி­நொச்சி மாவட்ட நீதி­பதி எம்.ஐ.நஹாப்தீன் பொத்­துவில் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் நீதிவான் பயிற்சிக் நிறுவ­னத்தின் நீதி­பதி என். கந்­த­சாமி அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 5 மாணவர் கடத்தல், வஸீம் தாஜுதீன் கொலை விவ­காரம் மற்றும் நிதிக் குற்­றங்கள் தொடர்­பி­லான பல்­வேறு முக்­கிய வழக்­கு­களை விசா­ரணை செய்யும் நீதி­ப­தி­க­ளுக்கும் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி கொழும்பு மேல­திக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ கொழும்பு பிர­தான நீதி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனினும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய கொழும்பு மேல­திக மாவட்ட நீதி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் கொழும்பு மேல­திக நீதிவான் ஏ.டி.என்.பெர்னாண்டோ நீர்கொழும்பு மாவட்ட நீதிவானாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதிபதியாகவும் கோட்டை மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே பாணந்துறை நீதிவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் யாவும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38