நாட்டில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! முழு விபரம் இதோ

Published By: Jayanthy

19 Jul, 2020 | 11:20 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய நால்வரும், கட்டாலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவரும்  இந்தியாவிலிருந்து வருகை தந்த இருவரும்,  ஐக்கிய எமிர் இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவரும் சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த 9 பேரும் அடங்குகின்றனர்.

அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2724 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2035 பேர் குணமடைந்துள்ளதோடு , 678 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர். 

இதேவேளை, 107 பேர் கொரொனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை நாடளவிய ரீதியில் 1883 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

ஹபராதுவ ஆலோசகர் குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக பணியாற்றியவர் குணமடைந்துள்ளார். ஹபராதுவ - ஹனட்டிகல பிரதேசத்தை ஆலோசகரே இவ்வாறு குணமடைந்துள்ளார்.

இவர் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்றுக்குள்ளாமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆலோசகருடன் தொடர்புடைய 21 நபர்கள் எதிர்வரும் புதன்கிழமை இரண்டாவது தடவை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

இவர்களிடம் மேற்கொள்ளக்கப்பட்ட முதலாவது பி.சி.ஆர். பரிசோதனைகளில் யாரும் தொற்றுக்கு உள்ளாகாயிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22