தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது

19 Jul, 2020 | 10:28 PM
image

(செ.தேன்மொழி)

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் சட்டவிதிகளை மீறியதாக 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுத் தொடர்பில் 147 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , 44 பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவளை அரச வாகனங்கள் 2 உட்பட 60 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

கேள்வி :குருநாகல் அரச மண்டப உடைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆம், இதன்போது குருநாகல் நகரசபை மற்றும் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளில் பிரகாரம் கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து , அவரது ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:00:04
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55