புதிய அரசாங்கத்தின் கீழ் எவ்வித அபிவிருத்தியும் இல்லை கொரோனா மாத்திரமே மிச்சம் - ரணில்

19 Jul, 2020 | 06:42 PM
image

இந்த அரசாங்கம் வந்தது நாள் முதல் எந்த அபிவிருத்தியும் இடம் பெறவில்லை , ஏற்பட்டிருப்பது கொவிட் -19 மாத்திரமே , இதனால் பொருளாதாரமும் மிகவும்  கீழ்தரமாக  நழிவடைந்துள்ளது.

இவ்வாறு முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரம சிங்க கூறினார்.

திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியாவில் "கிண்ணியா விஷன் மண்டபத்தில் வேட்பாளர் றோஹினா மகரூப் தலைமையில் இன்று (19) தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்: 

இன்று அரசாங்கம் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம்  சொல்கிறது கொரோனா 2 அலையும் தொடங்கி விட்டது என்று இந்த கொரோனா இத்தாலி நாட்டவர்கள் சொல்கிறார்கள்

நவம்பர் மாதம் வரை இந்த 2 வது அலை இருக்கும் என்றுஇலட்சத்திற்கு அதிகமானோர் இறப்பார்கள் எனவும். தற்போது அமெரிக்காவிலும் 2வது அலை ஆரம்பித்துள்ளது.

எம்மால சரியாக சொல்ல முடியாது முதலாவது கொரோனா அலை இரண்டாவது அலை வருமா என்பதை.

எமது நாட்டிற்கு இரண்டாவது கொவிட் -19 வரும் அது தேர்தலுக்கு முன்பு வருமா, பின்பு வருமா என்று உறுதியாக கூற முடியாது உள்ளது.

இன்று அரசாங்கம் சொல்லுகிறது இந்த கொரோனா பீதியை நாங்கள் ஏற்படுத்துகிறோம் என்கிறார்கள்.

அதே அரசாங்கம் மீண்டும் சொல்லுகிறது தொடங்கப் பட இருந்த பாடசாலைகள் மீண்டும் பிற்போடப் பட்டுள்ளது என்கிறார்கள். கொரோனா பற்றி பயமில்லா விட்டால் ஏன் பாடசாலைகளை மூட வேண்டும்.

உலகில் இந்த கொரோனா பற்றி முன்னோக்கி கூற பல நிபுணர்கள் குழு இருக்கிறார்கள்.

நாட்டில் சுகாதாரத்தை பழி கொடுத்தாவது இத் தேர்தலை முன்னெடுத்துச் செல்வதற்கே அரசாங்கம் விரும்புகிறது. அதன் பிற்பாடு ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எந்த ஆயத்தமும் இவர்களிம் இல்லை.

கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால் மீண்டும் பொருளாதாரம் வீழ்ச்சி காணும். அதன் பின் நாம் என்னா செய்வது.

நாம் மீண்டும் எப்போது விவசாயம் செய்வது, அப்போது கொரோனா வந்தால் கடலுக்கு போக முடியுமா, எல்லா இடங்களிலும் கடைகளை மூடுவார்கள், எல்லா தொழிற் சாலைகளும் மூடப்படும்.  கொழும்பில் வேலை வாய்ப்புகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புகளை இழப்பார்கள்.

இன்று வரை 5 இலட்சத்திற்கு அதிகமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது அதற்காக எடுக்கப்பட்ட சலுகைகள் தான் என்னா?

நான் இதற்கு முன்பு கூறி இருந்தேன் நாளொன்றுக்கு ஐயாயிரம் பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று.  இதுவரை ஒரு இலட்சம் பேருக்கு மாத்திரமே PCR பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 5 இலட்சம் பேருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது எமக்கு இப்போது  தேவை இருக்கின்ற சுகாதார சேவைகளை மேலும்  விருத்தி செய்ய வேண்டும்.  கொரோனா முழு நாட்டிலிருந்து அழிக்க ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப  அந்த விடயத்தை தான் நான் தினமும் கூறி வருகின்றேன்.

இன்று இந் நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக் குறை, அந்நிய பொருளாதார  செலவாணி இல்லை ஆடை ஏற்றுமதி இல்லை,  சுற்றுலாத் துறை இல்லை.  கிட்டத்தட்ட பல மில்லியன் பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது.

அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் கடன் செலுத்த வேண்டிஉள்ளது. இப்படியாயின் எப்படி இந் நாட்டை முன்னெடுத்துச் செல்வது. இந்த சந்தேகங்களுக்கு அரசாங்கம் இன்று பதில் சொல்ல தயாராக இல்லை.

இந்த நாட்டிற்கு பொருளாதார பிரச்சனை இல்லை,  மக்கமாகிய உங்களது ஜீவனுபாய பிரச்சனையாகும். நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் போது வீட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையும்.

2011- மற்றும் 2015 போல வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை என்னால் கட்டியெழுப்ப முடியும். அதனை செய்து கொடுப்போம்.

நாங்கள் கடன் சுமையால் பாதிக்கப் பட்டோர்களுக்கு கடன் சுமைகளை மீளச் செலுத்துவதற்கு முன் வந்துள்ளோம்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கியமாக சொல்ல வேண்டியது  அவர்களுக்கு லீசிங் கட்ட முடியாமல் இருந்தால் அவர்களுக்கு சில சலுகைகளை பெற்றுக் கொடுக்க முடியும்.

நாங்கள் கூறிய அனைத்து விடையங்களும் எங்களது தேர்தல் விஞ்ஞானத்தில் உள்ளது.

எதிர் வரும் 2050 இந்த சனத்தொகை மேலும் பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இதனால் விவசாயத்தை புதுப்பித்து உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். இணைதான்  ஐரோப்பிய ஒன்றியமும் சொல்கிறது என்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45