( சசி)

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரித்து காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறித்த மீன்வகை மனித உடலில் ஒட்டும் தன்மையுடையதாகக் காணப்படுகின்றதால், அது  உடலில் ஒட்டும் சந்தரப்பத்தில் உடலில் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பாசிக்குடா கடற்கரைக்கு செல்வோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஜெலிபிஸ் மிகவும் பழமையான மீனினம் என்பதோடு,சுமார் 70 கோடி வருடங்களுக்கு முன் கடலில் உருவாகியிருப்பதாக கடல்வள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.