இராஜாங்கனை, வெலிக்கந்த கல்வி வலய பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

Published By: Digital Desk 3

18 Jul, 2020 | 05:20 PM
image

இராஜாங்கனை, வெலிகந்த  கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்காக பாடசாலைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படுமெனவும்  ஏனைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவார காலத்திற்கு  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்தோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றின் திகதிகள் திங்கட்கிழமை  அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04