கோப் குழுவிலிருந்து வெளியேறினார் வேலுகுமார் வெற்றிடத்திற்கு சுஜீவ சேனசிங்க

Published By: Raam

07 Jul, 2016 | 08:00 AM
image

பாராளுமன்றத்தின்  பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து  தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விலகிக் கொள்வதாக அறிவித்தமையையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான  சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தான் ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரின் சபை தலைமைக்குழு, பொது குழு, மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி ஆகிய அமைச்சுகளின் கண்காணிப்பு குழு ஆகியவற்றில் உறுப்பினராக செயற்படுவதானால் இவை தொடர்பிலான செயற்றிட்டங்களை உரியவாறு முன்னெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் கோப் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதனிடையே கோப் குழுவில் சட்டத்தரணி ஒருவரை கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்வது பொருத்தமானது என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்தமைக்கமைய சட்டதரணி சுஜீவ சேனசிங்க இதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான கடிதமும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தின்  பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு என்னுடைய பெயரை பரிந்துறை செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஊழல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் உள்ளது.  அந்தவகையில் கோப் குழுவானது தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றது.  கோப் குழுவின்  இந்த விசாரணைகளுக்கு என்னால் முடிந்த முழு ஒத்துழைப்புகளை வழங்குவேன் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34