அபிவிருத்தி இல்லாமல் முடங்கி கிடக்கும் நானுஓயா வங்கிஓயா தோட்டம் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

06 Jul, 2016 | 06:43 PM
image

(க.கிஷாந்தன்)

இன்று அரசாங்கத்தினால் பல அபிவிருத்தி திட்டங்கள் மலையகப்பகுதிகளில் முன்னெடுக்கின்ற போதிலும் இன்னும் பல தோட்டங்கள் அபிவிருத்தி கானாத நிலையில் இருப்பதற்கு விதிவிளக்காக நானுஓயா வங்கிஓயா தோட்டம் காணப்படுகின்றது.

இத்தோட்டத்தில் 95 குடும்பங்களை சேர்ந்த 575 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளையர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட லயன் தொகுதிகள் இங்கு வசிக்கும் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவது வேதனைக்குறிய விடயமாகும்.

வீடுகளில் வசதிகள் போதாத நிலையின் காரணமாக அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த பணத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து எவ்விதமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

50 வருடங்களுக்கு மேலாக குடியிருப்பில் கூரை தகரம் மாற்றப்படவில்லை இதன் காரணமாக கூரை தகரம் சல்லடை போல் காணப்படுகின்றது.

தற்போது  இம்மக்கள் வசிக்கும் வீட்டின் கூரையின் மேல் கறுப்பு றபர் சீட்டுகள் போடப்பட்டு மரங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மணல் மூட்டைகளில் புற்கள் வளர்ந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்ள வசதி வாய்ப்புகள் இருக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எவறும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லையென இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தில் வைத்தியர் ஒருவர் இருக்கின்ற போதிலும் சுகாதார நடவடிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் இத்தோட்டத்திலிருந்து வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் 15 கிலோ  மீற்றர் தூரத்தில் உள்ள நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

அம்புலன்ஸ் வண்டி இன்மையால் நோயாளர்களை தோட்ட கொழுந்து ஏற்றும் லொறியில், கொண்டு செல்வதால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் பாதை மிகவும் மோசமான நிலையில் உடைந்து வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. 

இத்தோட்டத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நானுஓயா நகரப்பகுதி  பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதால் போக்குவரத்து சேவை இன்மையால் மாணவரகள் பல இடர்களை சந்திக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் இத்தோட்டத்திற்கு சென்ற மலையக அரசியல் வாதிகள் இம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதாக வாக்குறிதிகள் வழங்கிய போதிலும் இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கபடவில்லையென இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44