அடைய முடியாத இலக்கு நோக்கி மக்களை ஒருபோதும் நான் வழிநடத்தியதில்லை - டக்ளஸ்

18 Jul, 2020 | 09:29 AM
image

அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை  நான் ஒருபோதும் வழிநடத்தியதில்லை என்பதுடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் எமது  மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் அமைச்சரை சந்திக்க வந்திருந்த பலதரப்பட்ட பொது அமைப்புகள் மற்றும் மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவும், அதற்கு பின்னரான சூழலில் நாடாளுமன்றத்தில் எமது அரசியல் பலத்தின் ஊடாகவும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் வாழ்வியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாம் உண்மையாகவே உழைத்து வருகின்றோம். அதுவே இன்று நியமாகியும் உள்ளது.அதுமட்டுமல்லாது எல்லாக் காலத்திலும் நான் மக்களோடு வாழ்ந்து வருகின்றேன். அதனுடாக எமது மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் தெளிவாக அறிந்துகொண்டவன் நான்..

எனது ஆயுத வழிப்போராட்டத்தின் ஊடாகவும், தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவும் கிடைத்த அனுபவங்களில் இருந்தே, எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நம்பிக்கையோடு தீர்வு காண முயற்சித்து வருகின்றேன்.  அத்துடன் எமக்கு கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தீர்வுகளையும் கண்டும் கொடுத்திருக்கின்றேன். இருந்தும், போதிய அரசியல் பலம் எம்மிடம் இல்லாததால் இன்னும் தீர்க்கவேண்டிய எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம் எஞ்சியிருக்கின்றன. அத்துடன், நிலையான அரசியல் தீர்வும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

அந்தவகையில் எமது மக்கள் எந்தளவிற்கு என்னைப் பலப்படுத்தி, நான் முன்னெடுக்கும் வழிமுறையை பின்பற்றுகின்றார்களோ அந்தளவிற்கு பிரச்சினைகளை தீர்த்து, உரிமைகளைப் பெற்று, கௌரவமான, சமத்துவமான வாழ்வை நோக்கி நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்த அமைச்சர் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது கரங்களுக்கு அரசியல் பலத்தை தருவார்களானால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடியுமான அளவில் தீர்வகண்டுகொணடுக்க எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58