தன்னை கைதுசெய்ய எடுக்கும் முயற்சிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி ரிஷாத் உயர் நீதிமன்றில் மனு

18 Jul, 2020 | 08:27 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில்  தன்னை கைதுசெய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளார்.

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 விசாரணை அறையின் பொறுப்பதிகாரி ரவீந்ர விமலசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, அதன் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன்  வேதசிங்க,பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், உருவாக்கப்பட்ட சாட்சிகளை மையப்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, உள ரீதியாகத் தன்னைச் சோர்வடைய வைத்துள்ளது.

மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன்.

இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக "கொலொஸஸ்" நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை தொடர்பில் அப்போது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனமொன்றின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இக்கைது முயற்சிகள் இடம்பெறுகின்றன.

எனவே இந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை  இந்த விவகாரத்தில்  என்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும்.

 அத்துடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதுடன், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாரும் மனுவில் கோரப்பட்டுள்ளது.  அத்துடன் 5 கோடி ரூபா நட்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:22:40
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54