அனுமதிப் பத்திரமின்றி மணல் கொண்டு செல்பவர்களை உடன் கைது செய்யுங்கள் - மேன் முறையீட்டு நீதிமன்றம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

17 Jul, 2020 | 08:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு  மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண் மற்றும் மணலை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக நீக்கப்பட்டமையை ரத்து செய்யுமாறு கோரி சுற்றுச் சூழல் நீதிக்கான மையம்  மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான பரிசீலனையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக செலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்திற்கமைய, மணலைக் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமெனவும், அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அந்த அனுமதிப்பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற நிலைப்பாடு தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளதாகவும்  நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித ராஜகருணா ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதிப் பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவில், பிரதிவாதிகளாக அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும், சுரங்கம் மற்றும் பூ சரிதவியல் பணியகம், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38