சுகாதார வழிமுறைகளை வர்த்தமானிப்படுத்தினால் தேர்தலை நடத்த முடியாது - தயாசிறி

17 Jul, 2020 | 07:36 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறும் வழிமுறைகளை வர்த்தமானிப்படுத்தினால் தேர்தலை நடத்த முடியாது. மாறாக பிரசாரங்கள் எவற்றையும் முன்னெடுக்காமல் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பில் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் ,

 மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத் தேர்தலின் போது கடைகிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் பற்றி தெளிவுபடுத்துவதற்காகவே இன்றைய தினம் (நேற்று) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுகாதார பாதுகாப்புடன் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்ல்கள் ஆணைக்குழு மிக ஆழமாக ஆராய்ந்து வருகிறது.

நாமும் அது தொடர்பில் ஆராய்ந்து ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்க்கின்றோம். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் துரிதமாக வெளியிடப்படும். ஆனால் ஆணைக்குழு கூறுவதைப் போன்று வழிகாட்டல்களை வர்த்தமானிப்படுத்தினால் தேர்தலை நடத்த முடியாது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூறுவதைப் போன்று சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டால் எதுவும் செய்யாமல் வீட்டினுள் இருந்து தேர்தல் தினத்தன்று வாக்களிப்பில் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். எனவே பொது மக்களுடைய அல்லது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்வதே இதில் முக்கியமானதாகும்.

இந்நிலையில் வேட்பாளர்களுடைய விருப்பு இலக்கம் என்பவற்றை காட்சிப்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையிலிருந்து ஜனநாயகம் எந்தளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வெகு விரைவில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று நம்புகின்றேன். எவ்வாறிருப்பினும் தேர்தலை துரிதமாக நடத்துவதே சிறப்பாகும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53