'இவரின் திறமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது': முதஸ்ஸர் நஸார்

Published By: J.G.Stephan

17 Jul, 2020 | 11:50 AM
image

தானொரு சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை பாபர் அசாம் நிரூபிப்பதற்கு இங்கிலாந்து டெஸ்ட் ஒரு கடைசி பரீட்சையாகும்  என  பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முதஸ்ஸர் நஸார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான பாபர் அசாமிடமுள்ள திறமையை பார்க்கும்போது கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் அவரை சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதை நிரூபிப்பதற்கான கடைசி பரீட்சை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான முதஸ்ஸர் நஸார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதஸ்ஸர் நஸார் கூறுகையில்,‘‘இங்கிலாந்து தொடர் பாபர் அசாமுக்கான கடைசி பரீட்சையாகும். இதற்கு முன்னரும்  ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளார்.  பாபர் அசாம் இதுவரை சரியான முறையில் பரிசோதிக்கப்படவில்லை. இம்முறை  ஓட்டங்கள் குவித்தால், தற்போது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பாபர்,  இங்கிலாந்திலும் ஆதிக்கம் செலுத்தினால் அவரின் திறமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

‘ஓப் ஸ்டம்ப்” புக்கு வெளியில் வீசும் பந்தை ‘டிரைவ் ஷொட்’ அடிப்பது பாபர் அசாமின் பலவீனமாக இருந்தது. பாகிஸ்தான் ஆடுகளத்தில் விளையாடி வளர்ந்து வரும் துடுப்பாட்ட வீரர்களுக்கு இது வழக்கமான பலவீனம்தான். ஆனால், தற்போது அந்த பந்தை கொஞ்சம் காலதாமதமாக துடுப்பாட்டமட்டைீலு பந்து வலுவாக படும் அளவிற்கு மாற்றிக் கொண்டார். தென் ஆபிரிக்காவில் டேல் ஸ்டெய்னின் ‘அவுட் ஸ்விங்’ பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41