வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு எதிர்வரும்  2018 ஆம் ஆண்டாகும்போது நிறைவு செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

ராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தை பரப்பியுள்ளது. இதில் நாம் மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.