தெரிவுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வாக செயற்படுத்தப்படும் - ஐ.தே.க உறுதி

17 Jul, 2020 | 09:03 AM
image

(நா.தனுஜா)

தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் தீர்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ,  இந்து சமூத்திரத்தின் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான முன்னோடிப்பணிக்கு இலங்கையை தலைமைத்தாங்க வைப்பதுடன் ஐ.நா உள்ளிட்ட எந்தவொரு அமைப்பிலிருந்து விலகாமலும் அணிசாரா கொள்கைக்கையை பாதுகாத்தும் செயற்படுவதாகவும் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்தலை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள கொள்கை பிரகடணத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளன. ஆனால் அரசாங்கம் அனைத்தையும் கொரோனா தொற்றின் மீது சுமத்தி தப்பிக்கும் தந்திரோபாயத்தில் ஈடுப்பட்டு வருகின்றது .

தொழில், வருமான வழிகளில் தடங்கல். ஒருவேளை உணவுக்காக பாடுபடும் ஏழைகள் முதல் பாரியளவில் வருமானம் ஈட்டும் செல்வந்த வர்த்தகர்கள் வரை அனைவரும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சுருக்கமாகக் கூறுவதானால் முழு நாட்டினதும் பொருளாதாரம் அபாயகரமான நிலைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது.

2021 ஆம் ஆண்டளவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் தொழில் இழக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் இழப்போரும்இதில் உள்ளடங்கும் பட்சத்தில் தொழில் இழந்தவர்களின் நிலைமை அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும்.

வெளிநாட்டு அந்நிய செலாவணி படிப்படியாக கரைந்து செல்கின்றது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகக் கூறி 450 பில்லியன் ரூபா நிதிநாணயத்தாள்களை தேசிய பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடுவதற்கு அரசாங்கம் செயற்பட்டதன் பிரதிபலனாக நெருக்கடிகளே மேலும் அதிகரித்துள்ளன.

இலங்கையின் ஐக்கியத்தன்மை இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வீழ்ச்சி கண்டது. கோட்டை அரசில் ஆட்சிப்புரிந்த ஆறாவது பராக்கிரமபாகு மன்னனின் கீழ் 22 வருடங்கள் நாடு ஐக்கியப்பட்டு இருந்தாலும் அதன் பின்னர் அனைத்து காலப் பகுதியிலும் இலங்கை பிளவுபட்ட பல்வேறு ஆட்சிகளின்கீழ் நிர்வகிக்கப்பட்டது.

இலங்கையை மீண்டும் ஒற்றை ஆட்சியாக ஐக்கியப்படுத்தியமைக்கான பெருமை 1948 ஆம் ஆண்டு அமரர் டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரித்தானது. 

அனைத்து   உயிரினங்களையும் ஒரே விதமாக கருத வேண்டும் என்ற புத்த பகவானின் போதனையை அடிப்படையாக கொண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவர்.பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கிடைப்பதுடன் அதனை பாதுகாத்து போஷிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். பிரஜைகளின் விருப்பத்திற்கு ஏற்ப தாம் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமையை அரசாங்கம் பாதுகாக்கும்.

தேசிய  இனப்பிரச்சனைக்கு  எமது  தீர்வானது,  பாராளுமன்றத  தெரிவுக்குழுவில்நடைப்பெற்ற கலந்துரையாடல் மற்றும் அதன் பின்நடைப்பெற்ற கலந்துரையாடலில் ஏற்றுக்கொண்ட தீர்மானங்களுக்மையவே நடைமுறைப்படுத்தப்படும்.

பொருளாதாரத்தை மீள உயிர்ப்பிக்கும் போது சில பிரிவுகள் தொடர்பாக அடிப்படை கவனத்தை செலுத்த வேண்டும். கொரோனா தொற்றினால் வீழ்ச்சியடைந்த உலக மற்றும் தேசிய பொருளாதாரம் அதில் ஒரு பிரிவு. இந்தப்பின்புலத்தை கவனத்திற்கொண்டே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

கொரோனா இரண்டாம் அலை நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு முழுமையாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இரண்டாம் அலையாக நோய் பரவினால் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்;படும்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்பை வென்றெடுக்க வேண்டும். தனிப்பட்ட அரசாங்கமாக இந்த சவாலை வெற்றிகொள்ள முடியாது. அதற்காக ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் போன்றவை 100 வீதம் பாதுகாக்கப்படல் வேண்டும்.

வெளிநாட்டு வருமானங்களின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் 7000 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாம் இந்த வருடம் இழக்கக்கூடும். கடன் மற்றும் சேவைகளுக்காக இந்த வருடம் 5000 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும்.

இதனால் அடுத்த இரண்டு வருடங்களில் 6000 மில்லியன் அமெரிக்க டொலரை தேசிய பொருளாதாரத்துக்கு சேர்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மதிப்பிட்டுள்ளது. அடுத்த வருடத்தில் குறைந்தபட்சம் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும்.

உலகில் பெரும்பாலான நாடுகள் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் தத்தமது நாடுகளின் பொருளாதாரத்தை மீள உயிர்ப்பிப்பதற்கு தேவையான நிதியை திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, எகிப்து மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகள் தற்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் ஒத்துழைப்பைப் பெற்றிருப்பதனை கருத்தில் கொள்ள முடியம்.

எனினும், இலங்கையால் எந்தவொரு சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை முடியாது போயுள்ளது. நாட்டை ஆட்சி செய்யும்ஆட்சியாளர்களால் பொருளாதாரக் கொள்கைகளோ அல்லது திட்டங்களோ இல்லாததன் காரணமாக தெளிவற்ற நிர்வாக முறைமையால் சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் செயற்பாட்டு கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கே ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் செயற்பட்டது. அந்த நோக்கத்தை கொண்டே கொழும்பு வலயத்தை நிதி மத்திய நிலையமாக்குவதற்கு நிதி நகர சட்டம் கொண்டு வரப்பட்டது.

சர்வதேச விவகாரங்கள், பல்வேறு வகையிலான சர்வதேச ஒத்துழைப்புக்கள், சர்வதேச நெருக்கடிகளுக்கான தீர்வு மற்றும் சிறிய நாடுகளின் இறைமையை வலுப்படுத்துவதற்கு சர்வதேச அமைப்புக்களின் பங்களிப்பு தீர்மானமிக்கதாகும். உலகில் எந்தவொரு நாடும் ஐக்கிய நாடுகள் சபையைவிட்டுச் சென்றதில்லை. நாமும் இந்த கொள்கையை எதிர்காலத்திலும் கடைப்பிடிப்போம்.

2001-2004 மற்றும் 2015-2019 ஆண்டுக் காலப் பகுதிகளில் நாமும் அனைத்து நாடுகளுடனும் மகத்தான மற்றும் நட்புறவுடன் கூடிய இராஜதந்திர தொடர்புகளை பேணினோம். இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள், பிம்ஸ்டெக் மற்றும் ஆசிய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், கென்யா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் எமது நட்பு நாடுகள் பட்டியலில் அடங்கியிருந்தன.

இந்து சமூத்திரத்தின் போக்குவரத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான முன்னோடிப்பணியை நாமே நிறைவேற்றினோம். இரு தரப்பு மற்றும் பல தரப்பு உடன்படிக்கைகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பை பல்வேறு நாடுகளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டோம்.எதிர்காலத்தில் தெற்காசியா மற்றும் வங்காள விரிகுடாவை அண்மித்த நாடுகளுடன்பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21