மைத்திரி ரணில் இணைந்த தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு நாட்டு மக்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. தமது நலனுக்காக நாட்டின் முதுகெலும்பான கல்வியை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றது என தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சாட்டியது. 

அந்த அமைப்பின் செயலாளரான ரொக்கமுள்ள ஹித்த பிக்கு இந்த குற்றசாட்டை முன்வைத்தார். 

மருதானையில்  அமைந்துள்ள  சி.எஸ்.ஆர் சனசமூக நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவுக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

(கா. சந்திரன்)