கொரோனா வைரஸ்; அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைப் பேணவேண்டும் - கரு ஜயசூரிய

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 03:08 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கையாளுதல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் உயர்வான வெளிப்படைத்தன்மையைப் பேணவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அதனூடாக மக்களுடன் ஏற்படுத்தப்படும் இடைத்தொடர்பு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரிதும் உதவும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாட்டில் கடந்த மார்ச் மாதமளவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையத்தொடங்கியதை அடுத்து, நாடு முற்றாக முடக்கப்பட்டு தொற்றுப்பரவல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் மீண்டும் இம்மாத ஆரம்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வளித்தல் நிலையம், ராஜாங்கனைப்பகுதி ஆகியவற்றில் பெருமளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் நிலை தோன்றியிருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் மற்றொரு பக்கத்தில், இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் மற்றும் கையாளுதல் செயற்பாடுகளில் அரசாங்கம் உயர்வான வெளிப்படைத்தன்மையினைப் பேணவேண்டும் என்று அரசியல் கட்சிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் என்பன தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. வெளிப்படைத்தன்மை மூலமாக உருவாகும் இடைத்தொடர்பு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவதற்குப் பெரிதும் வழிகோலும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37