சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான வாக்களிப்பு முறையை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய.!

Published By: J.G.Stephan

16 Jul, 2020 | 02:51 PM
image

(எம்.மனோசித்ரா)

வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தனியான அல்லது நடமாடும் வாக்கெடுப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதே போன்று தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் விஷேட வாக்கெடுப்பு நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக தபால் மூல வாக்களிப்பை தவறவிட்ட வாக்காளர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வாக்களிக்க வாய்ப்பளிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள வாக்களர்களுக்கான 3 வேலைத்திட்டங்கள் குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று ஆரம்பத்தில் எண்ணினோம். எனினும் தற்போது அதிகளவானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்காக தனி வாக்கெடுப்பு நிலையங்களை ஸ்தாபிப்பது அல்லது நடமாடும் வாக்கெடுப்பு நிலையங்களை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.

தேர்தல்கள் ஆணைக்குழு சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சுய தனிமைப்படுத்தலில் மற்றும் இரண்டாவது முறையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை சாதாரண வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. வாக்கெடுப்பு நிலையங்களில் வைரஸ் பரவலுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ளவர்களுக்கும் நாம் நிச்சயமாக வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்போம். அங்கு சேவையாற்றும் அரச அதிகாரிகள் , பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் உதவியுடன் அங்கு வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கொரோனா ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து இதற்கான யோசனைகளை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

வர்த்தமானி
பொது சுகாதார பரிசோதகர்கள் தேர்தல் பணிகளில் எம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டல்கள் வர்த்தமானிப்படுத்தப்படாமையால் அவர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இது தேர்தலை நடத்துவதில் எமக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். வர்த்தமானிப்படுத்தாவிட்டால் அது தேர்தலில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.

செவ்வாய்கிழமை தபால் மூல வாக்கெடுப்பின் போது வடமத்திய மாகாணத்தில் அதிகாரிகள் சிலர் ஒன்றாகக் கூடி வாக்களிக்க முற்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் அதிகாரிகளுடைய அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை. அரச அதிகாரிகளையே  கட்டுப்படுத்த முடியாத போது சாதாரண மக்களை கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல. எனவே சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை வர்த்தமானிப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் மீண்டும் ஆராயும். ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அர்ப்பணிப்புடன் நாம் செயற்படுவோம். எமக்கு தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை கிடையாது. ஆனால் குறித்த திகதியில் தேர்தல் நடத்தப்படுவதற்கு கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட சூழல் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19