புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் பலி

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 03:05 PM
image

மங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஆசியாவில் அதிகளவில் காணப்படும் பெரிய கொறித்துண்ணிகளான மர்மோட்டில் இருந்து பிளேக் நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் அவற்றை வேட்டையாடவும் உண்ணவும் மங்கோலியா அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கோபி-அல்தாய் மாகாணத்தின் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் அவனுடன் தொடர்பில் இருந்த 15 பேரும் மர்மோட் உண்ட மேலும் 2 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மங்கோலியா அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வடக்கு பிராந்தியமான இன்னர் மங்கோலியாவில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி முன்னேற்றம் அடைந்து வருவதாக சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 15 பேர் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது. அரசாங்கம் தனது உயர்மட்ட அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்றார்.

முன்னதாக ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பில், இன்னர் மங்கோலியாவின் பயன்னூர் பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு மர்மோட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இறந்த விலங்குகள் குறித்து புகாரளிக்கவும் 2020 இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52