தேர்தலின் போது இடம்பெற கூடிய மனித உரிமை மீறல்களை கண்காணிக்க விஷேட பிரிவு

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 12:48 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவைகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்குமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை நிறுவியிருக்கிறது.

2020 பொதுத்தேர்தல் காலகட்டத்தில் அதனுடன் தொடர்புடைய வகையில் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலேயே புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் விசேட அலகினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொதுமக்கள் 24 மணிநேர துரிதசேவையான 1996 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள விசேட பிரிவிற்குச் செய்யமுடியும்.

மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளை எழுத்துமூலமாக முன்வைக்க விரும்பும் பட்சத்தில் அலகுக்குப் பொறுப்பான அதிகாரி, தேர்தல் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் அலகு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலக்கம் 14, ஆர்.ஏ.த.மெல் மாவத்தை, கொழும்பு 04 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

அத்தோடு அந்த எழுத்துமூலமான முறைப்பாடுகளை 011 2505574 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது iihrcsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்க முடியும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21