தமிழர்கள் சிங்களவர்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை: சி.சிறீதரன்

Published By: J.G.Stephan

16 Jul, 2020 | 11:12 AM
image

(எம்.நியூட்டன்)

தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. ஆனால் தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலே இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலைப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்  பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள் தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக  இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த மண்ணிலே எமது உரிமைகளை பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம், போராடியும் வருகிறோம்.

இவ்வாறாக நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன் செயற்படுகிறது. வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசு செயற்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20