பாகிஸ்தானில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்பு

Published By: Digital Desk 3

16 Jul, 2020 | 11:01 AM
image

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமியொருவர், இரு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தால், ஆத்திரத்திரமடைந்த மக்கள் குற்றவாளிகளை தூக்கிலிடக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பஞ்சாப் மாகாணத்திலுள்ள லாகூர் தலைநகரிலிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்திலுள்ள பட்டர் டோக்ரான் சவிந்தா கிராமத்தில் முச்சக்கரவண்டி சாரதியின் மகளான குறித்த 8 வயது சிறுமி, தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, குறித்த இரண்டு சந்தேக நபர்கள் அவளுக்கு சில போதைப்பொருட்களைக் கொடுத்து, ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆள்நடமாட்டம் அற்ற இடத்தில் அவர்கள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோக சித்திரவதை செய்துள்ளனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சில உள்ளூர் மக்கள் அங்கு சென்றபோது சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமி ஆபத்தான நிலையில் சியால்கோட்டில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மற்றும் பொலிஸ் அக்கறையின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தினரும் பொது மக்களும் ஒரு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.

குற்றவாளிகளை கைது செய்து பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட  பொலிஸ் மா அதிபர் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக முறைப்பாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டப் பிரிவைச் சேர்க்கவும் சிறுமியின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, லாகூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள கசூரில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாடு முழுவதும் சீற்றம் காணப்பட்டது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், சந்தேகநபரான 23 வயதுடைய இம்ரான் அலி, என்பவருக்கு நான்கு நாள் நடவடிக்கைகளுக்குப் பிறகு மரண தண்டனையை வழங்கியுள்ளது.

இதற்கிடையில், லாகூரிலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள சுனியன் நகரில் ஒரு சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மூன்று சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. குறித்த குற்றவாளிகள்  சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52